முதன் முதலில் ஆசிய ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பெறும் கிரிக்கெட் அணி!! உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!!
ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. மேலும் நடைபெற உள்ள 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்திய ஆடவர், மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக இந்திய அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு கிரிக்கெட் விளையாட அனுமதி பெறவில்லை. ஆனால் இந்த முறை பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. ஆடவர் அணியில் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சிஎஸ்கே அணியில் ருதுராஜ் சிறப்பாக விளையாடி வந்தார்.
இந்திய ஆடவர் அணி ருதுராஜ் கெயிக்வாட் கேப்டானாகவும், ஜெய்ஸ்வால், ராகுல் த்ரிப்பாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, வாஷிங்கடன் சுந்தர், ஷபாஸ் அஹமது, ரவி பிஸ்னோய், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஷிவம் மாவி, ஷிவம் டுபே, ப்ரப்சிம்ரன் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளார். அதனையடுத்து யஷ் தாகுர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹீடா, சாய் சுதர்ஷன்.
இந்திய மகளிர் அணி கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கௌர் , மந்தனா, வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் , தீப்தி சார்பா, ரிச்சா கோஷ், தேவிகா வைத்யா, அஞ்சலி சர்வாணி, கனிகா அகுஜா போன்ற வீரர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.