Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி! இன்று தொடங்குகிறது!

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் இருக்கக்கூடிய சவாய் மான்சிங் ஆடுகளத்தின் இன்று இரவு நடைபெற இருக்கிறது.

20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து 20 ஓவர் உலகக் கோப்பையுடன் விராட் கோலி விலகியுள்ளார். இதனை அடுத்து 20 ஓவர் இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித்சர்மா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்த தலைமை பயிற்சியாளர் இடத்திற்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி நியமிக்கப்படுவார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. புதிய தலைமையின் கீழ் இந்திய அணி களம் காணும் முதல் போட்டி இது என்பதன் காரணமாக, வழக்கத்தைவிட அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்திய அணியில் விராட்கோலி, வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வெங்கடேஷ்ஐயர், ஹர்சல் பட்டேல,, அவேஷ் கான், உள்ளிட்டோர் இடம் பிடித்திருக்கின்றன.

இன்றைய தினப் போட்டிகளில் இரண்டு தேசியப் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது அதில் இந்திய அணியின் சார்பாக ரோகித் சர்மா லோகேஷ் ராகுல், வெங்கடேஷ் ஐயர்  ருதுராஜ், சூர்யகுமார், யாதவ், ரிஷப் பண்ட், அக்‌ஷர் பட்டேல், அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகம்மது சிராஜ், சாஹல், உள்ளிட்டோர் இடம்பிடிக்க இருக்கிறார்கள்.

அதேபோல நியூசிலாந்து அணியின் சார்பாக மார்டின் கப்தில்  மிட்செல் லைன் பிலிப்ஸ் மார் சப்மன் டிம்செய்பெர்ட் ஜேம்ஸ் நீசம், டிம் சவுதி,  கைல் ஜாமிசன்,ஆடம் மில்னே அல்லது பெர்குசன்,சோதி, உள்ளிட்டோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

Exit mobile version