Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

Pakistan batsman Imam Ul-Haq is trapped lbw (leg before wicket) for 34 on the third day of the second Test cricket match between England and Pakistan at Headingley cricket ground in Leeds, northern England on June 3, 2018. / AFP PHOTO / Lindsey PARNABY / RESTRICTED TO EDITORIAL USE. NO ASSOCIATION WITH DIRECT COMPETITOR OF SPONSOR, PARTNER, OR SUPPLIER OF THE ECB

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சம்மதம் தெரிவித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது.

இதில் 2 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட கடந்த மாத இறுதியில் இங்கிலாந்து சென்றது. கடந்த ஒருவாரமாக பாகிஸ்தான் அணி பயிற்சியில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில் இரு அணிக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஓல்ட் டிராஃபோர்ட்  கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 3.30pm மணிக்கு தொடங்குகிறது.

Exit mobile version