Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று தொடங்குகிறது இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி!!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இன்று ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்கும் இந்தத்தொடர் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஏற்கனவே இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்து சாம்பியன்ஷிப் வெல்லும் வாய்ப்பை தவறிவிட்டதால், இங்கிலாந்து தொடரில் இந்திய அணி வெற்றி பெற முனைப்பு காட்டி உள்ளது.

இந்தியா கடந்த 2007-ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இல்லை. இந்த முறை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற ஆர்வமாக உள்ளது. அதே போன்று இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி இந்தியாவிடம் தொடரை இழந்ததால் சொந்த மண்ணில் பதிலடி தர தயாராகி உள்ளது. அதனால், இந்த தொடர் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிகழும் என்பதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இந்நிலையில் இந்த 5 டெஸ்ட் போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கும். அதே போன்று இந்த போட்டிகள் ஒளிபரப்பும் உரிமையை சோனி தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதன் காரணமாக சோனி குழும இந்த சேனல்களில் (Sony Six, Sony 4 தமிழ், Sony 3 ஹிந்தி) போட்டிகளை காணலாம்.

Exit mobile version