Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மகன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற காரணத்திற்காக தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்!

மகன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற காரணத்திற்காக தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்!

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் அவர்களின் தந்தை வருமானவரித் துறையில் பணிபுரிந்து வருகின்றார். வாரத்திற்கு இரண்டு மூன்று தினங்கள் அலுவலகத்திற்கு அவர் சென்றாக வேண்டும். இதன் காரணமாக, தன்னுடைய மகனுக்கு நோய்த் தொற்று வைரஸ் வந்துவிடக்கூடாது என்ற காரணத்தால், அவர் இங்கிலாந்து தொடரில் பங்கேற்பதில் சிக்கல் வந்து விடக்கூடாதே என்ற காரணத்திற்காக,மற்றொரு வீட்டில் அவர் தங்கியிருந்து அலுவலகம் சென்று வருவதாக சொல்லப்படுகிறது.

வாஷிங்டன் பங்களிப்பு தொடர்பாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்ததாவது ஐபிஎல் போட்டியில் இருந்து வாசிங்டன் சுந்தர் திரும்பியதில் இருந்து நான் வேறொரு உலகத்தில் தங்கியிருந்து வருகிறேன்.

என்னுடைய மனைவியும், மகளும் வாஷிங்டன் சுந்தர் உடன் தங்கி இருந்து வருகிறார்கள். அவர்கள் எங்களின் செல்வது கிடையாது. காணொளி அழைப்புகள் மூலமாகவே வாஷிங்டன் உடன் உரையாற்றி வருகிறார். ஒரு வார காலத்தில் சில தினங்களுக்கு நான் அலுவலகம் செல்லவேண்டும் என்ற காரணத்தால் என்னால் தொற்று பாதிப்பு வந்துவிடக்கூடாது இங்கிலாந்திலும் லார்ட்ஸ் மைதானத்தில் அவர் விளையாட வேண்டும் என்பதுதான் வாஷிங்டன் கனவு எந்த காரணத்திற்காகவும் இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது நினைக்கிறேன் கூறியிருக்கிறார்.

Exit mobile version