Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமிரகத்தில் மைதானம் இப்படித்தான் இருக்கும் – புவனேஷ்வர் குமார்

இந்தியாவை போன்ற சீதோஷ்ண நிலைதான் ஐக்கிய அரபு அமீரகத்திலும் என புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புவனேஷ்வர் குமார் பேசும்போது ‘‘டெக்னிக்கலாக அதிக அளவில் மாற்றம் செய்து கொள்ள வேண்டியதில்லை. இங்குள் சீதோஷ்ண நிலை இந்தியாவை போன்றுதான் உள்ளது. ஒரே விசயம் நாம் இந்தியாவில் 8 மைதாங்களில் விளையாடினோம். இங்கு மூன்று மைதானம்.
சீதோஷ்ண நிலை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். தொடரின் 2-வது பாதி நேரத்தில் ஆடுகளம் சற்று ஸ்லோவர் ஆகும். நாங்கள் நீண்ட வருடங்களாக குறைந்த அளவில் ஸ்கோர் அடித்து எதிரணிகளை அதற்குள் கட்டுப்படுத்தியுள்ளோம். இதுதான் எங்கள் அணியில் பலம். இனிமேலும் அதுபோன்று செய்ய இயலும் என்பதை என்னால் கணிக்க இயலாது. ஆனால் அதை செய்ய விரும்பிறோம்’’ என்றார்.
Exit mobile version