Rajasthan:ராஜஸ்தானில் தமிழா கபடி வீரர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நேற்று இணையதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வந்து. அதில் தமிழக கபடி வீரர்கள், ராஜஸ்தானில் தாக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்து. மேலும் அதில் தமிழ்நாட்டுக்கு திரும்பி போயிடுங்க என ராஜஸ்தானியர்கள் பேசி தமிழக வீரர்களை தாக்கி இருந்தார்கள். இது மேலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதாவது, ராஜஸ்தான் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான இந்திய அளவிலான கபடி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் பல மாநிலங்களை சேர்ந்த கல்லூரிகளில் இருந்து கபடி அணி மாணவர்கள் வருகை புரிந்தார்கள். இந்த போட்டியில் கலந்து கொள்ள தமிழகத்தில் இருந்து எஸ்.ஆர்.எம், வேல்ஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று ராஜஸ்தான் அணிக்கும் தமிழக அணிக்கும் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியை காண நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வருகை புரிந்து இருந்தார்கள். அப்போது நடைபெற்று கொண்டிருந்த கபடி போட்டியில் தமிழ்நாட்டு அணி வீரர்களுக்கு சரியான பாயிண்ட்கள்,போன்களும் நடுவர் வழங்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது. இதனால் சரியான பாயிண்ட்,போனஸ்கள் வழங்க தமிழக வீரர்கள் கேட்டு இருக்கிறார்கள். அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் ராஜஸ்தான் அணி வீரர்கள் மற்றும் நடுவர்கள்.
எனவே இது மேலும் சண்டையாக மாறி இருக்கிறது. “தமிழக வீரர்களே தமிழ் நாட்டுக்கு ஓடி விடுங்கள்” என்று கூறி அங்கு இருந்த இருக்கை நாற்காலியை எடுத்து தமிழக வீரர்களையும், பயிற்சியாளர்களையும் ராஜஸ்தான் வீரர்கள் தாக்கி இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.