உலகமே எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி : 4 தனி நபர்கள் மோதல்?

0
105

உலகமே எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி : 4 தனி நபர்கள் மோதல்?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான், நேபாள அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் நேபாள அணியை துவம்சம் செய்து பாகிஸ்தான் தன் முதல் வெற்றியை பதிவு செய்து ஆட்டத்தை துவக்கியுள்ளது.

இதனையடுத்து, இன்று நடைபெறும் ஆசிய கோப்பை தொடர் கிரிக்கெட் போட்டியில், 2-வது லீக்கில் நடப்பு சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேசத்தை நேருக்கு நேர் மோத உள்ளன.

இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

இதற்காக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இலங்கை சென்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில், முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தான், இந்தியா அணிகள் மோத இருப்பதால் உலக ரசிகர்களிடயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், இப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதும் இந்த ஆட்டத்தில் வெற்றியை தீர்மானிக்கக் கூடிய அந்த 4 தனிநபர் மோதல்கள் குறித்து பார்ப்போம் –

ஆசிய கிரிக்கெட் போட்டியில் ஷாகின் ஆப்ரிடிக்கும், ரோகித் சர்மாவுக்கு இடையிலான மோதல் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும். 2 ஆண்டுகளுக்கு முன் டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா ஷாகின் ஆப்ரிடியிடம் கோல்டன் டக்கானார். ஏனென்றால், ஷாகின் ஆப்டிக் இடதுகை வேகப்பந்து வீச்சாளர். ஆதலால் இதை எப்படி ரோஹித் சர்மா எதிர்கொள்வார் என்பதை வைத்துதான் இந்தியா வெற்றியை தீர்மானிக்க முடியும்.

அதேபோல், விராட் கோலிக்கும், ஹாரிஸ் ரவுஃப்க்கும் இடையே மோதல் உள்ளது. கடந்தமுறை டி20 உலக கோப்பை போட்டியில் ஹாரிஸ் ரவுஃப் போட்ட பந்தில் விராட் கோலி 2 சிக்ஸர்களை பறக்க விட்டார். இது இன்றும் ரசிகர்கள் மனதில் உள்ளது. ஹாரிஸ் ரவுஃப், விராட் கோலியின் அந்த 2 சிக்ஸர்களை என்னால் மறக்க முடியாது என்று கூறியிருக்கிறார். ஆதலால் இவர்கள் இருவருக்குள்ளும் ஒரு கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3-வதாக பாபர் அசாமுமிற்கும், பும்ராவும் இடையே போட்டி உள்ளது. பாபர் அசாம், பும்ரா பழிவாங்க உள்ளார். ஏனெனில், டி20 உலக கோப்பையில் பும்ரா பந்துவீச்சை பாபர் அசாம் பொளந்து தள்ளினார். கண்டிப்பாக, இப்போட்டியிலும், பாபர் அசாம்க்கு பும்ரா பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4வதாக குல்திப் யாதவ், இஃப்திகார் அகமது இடையே மோதல் உள்ளது. குல்தீப் யாதவ் தன் சுழற் பந்து வீச்சால் பாகிஸ்தானின் நடுவரிசை வீரர்களை எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.