ஜோதிடரை பணியில் அமர்த்தி வீரர்களை தேர்வு செய்த இந்திய கால்பந்து சம்மேளனம் – வெளியான தகவலால் வெடித்த சர்ச்சை!

0
81
#image_title

ஜோதிடரை பணியில் அமர்த்தி வீரர்களை தேர்வு செய்த இந்திய கால்பந்து சம்மேளனம் – வெளியான தகவலால் வெடித்த சர்ச்சை!

ஜோதிடர் ஒருவர் சொல்வதைத்தான் இந்திய கால்பந்து அணிக்கு வீரர்களை பயற்சியாளர் தேர்வு செய்வதாக வந்த தகவலால் தற்போது பூகம்பமே வெடித்துள்ளது.

அதாவது, இந்திய கால்பந்து சம்மேளனன் ரூ. 15 லட்சம் பணம் கொடுத்து பூபேஷ் சர்மா என்ற ஜோதிடரை பணியில் அமர்த்தியதாகவும், அந்த ஜோதிடர் ஜாதகத்தை பார்த்து யாரை விளையாட வைக்கலாம் என்று சொல்கிறாரோ அவரைத்தான் சம்மேளனம் தேர்வு செய்வதாக வந்த தகவல் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தியாவில் மூட நம்பிக்கை நிலவி வருகிறது. அதிர்ஷ்டம் இருந்தால் ஒருவர் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். ஆனால், திறமையோடு அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும்.

பணியில் அமர்த்தப்பட்ட பூபேஷ் சர்மா ஜோதிடரிடம் இந்திய வீரர்களின் ஜாதகம் இருக்குமாம். இந்த வீரர் இன்று சரியாக விளையாட மாட்டார். இந்த வீரர் நம்பிக்கையுடன் விளையாடுவார். இந்த வீரர் சிறப்பாகவே விளையாடுவார் என்று ஜாதகத்தைப் பார்த்து சொல்வாராம். இதை வைத்து பயிற்சியாளர் வீரர்களை தேர்வு செய்கிறாராம்.

இந்த தகவல் தற்போது இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஜோதிடர் சொன்னபடியே, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாம். பூபேஷ் சர்மா ஜோதிடரிடம் பேச்சை கேட்டு இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டது தற்போது கால்பந்து உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியில் ஆழ்த்தியுள்ளது.

இது உண்மையா? இல்லையா? என்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டப்பின்னர் தான் தெரியவரும்.