Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐ.பி.எல் தொடர் மட்டுமே முக்கியமானது இல்லை

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் சுவர் என அழைக்கப்படும் வீரர் ராகுல் டிராவிட். அதேபோல தற்போது இந்திய டெஸ்ட் அணியில்  முக்கியமான வீரராக வலம் வரும் 32 வயதான புஜாரா, ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறார்.  ஐ.பி.எல். ஏலத்தில் விலைபோகாத அவர் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘ஐ.பி.எல். ஏலம் வியூகங்களும், தந்திரமும் நிறைந்தது என்பதை அறிவேன். உலகத்தரம் வாய்ந்த தென்னாபிரிக்கா வீரரான அம்லா கூட விலை ஏலம்  போகவில்லை. 20 ஓவர் போட்டிகளில் சிறந்த பல வீரர்களும் விடுபட்டு உள்ளனர்.

அதனால் என்னை எடுக்காததற்காக ஐ.பி.எல். ஏலம் முறை மீது எனக்கு வருத்தமோ, கவுரவ பிரச்சினையோ இருந்ததில்லை. ‘புஜாரா ஒரு டெஸ்ட் வீரர்’ என்று முத்திரை குத்தி விட்டனர். வாய்ப்பு அளிக்கப்பட்டால் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டிலும் எனது திறமையை நிரூபித்து காட்ட முடியும். உள்ளூர் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக (சராசரி 54) விளையாடி உள்ளேன். முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்திருக்கிறேன். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்’ என்றார்.

Exit mobile version