Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இங்கிலாந்தை கிண்டல் செய்த இத்தாலி வீரர்! நிறைய சாப்பிடுங்கள் என அறிவுரை!

The Italian player who teased England! Advice to Eat Lots!

The Italian player who teased England! Advice to Eat Lots!

இங்கிலாந்தை கிண்டல் செய்த இத்தாலி வீரர்! நிறைய சாப்பிடுங்கள் என அறிவுரை!

16வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மாதம் 11ஆம் தேதி ஆரம்பித்தது. இந்த போட்டியில் 24 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்று முடிவில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தோல்வியை சந்திக்காமல் இறுதிச்சுற்றில் சாம்பியன்ஷிப் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் லண்டனில் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இங்கிலாந்து அணி ஒரு கோலுடன் முன்னிலை வகித்தது. இங்கிலாந்து அணி வீரர் லூக் ஷாவின் கோல்  ஒரு நிமிடம் 57வது வினாடியில் அடிக்கப்பட்டது. இது யூரோ சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அடித்த வேகமான கோல் என்று சொல்லப்படுகிறது. ஆட்டத்தில் இதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதி ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் இத்தாலி அணியின் வீரர் லியோனர்டோ போனுக்சி விளையாடும்போது கோல் அடித்து அசத்தினார்.

இதனால் ஆட்டம் ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு  வந்தது. தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலவும் பலனளிக்காமல் போனது. இதனை தொடர்ந்து அளிக்கப்பட்ட அதிகப்படியான நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. அதில் இத்தாலி அணி மூன்று கோல்களும் இங்கிலாந்து அணி இரண்டு கோல்களும் அடித்தன.

அதன் அடிப்படையில் இத்தாலி அணி வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக 4 முறை உலக சாம்பியனான இந்தாலி அணி இதற்கு முன்பு ஒரே ஒரு முறை யூரோ கோப்பையை 1968ஆம் ஆண்டு மட்டுமே வென்றுள்ளது. களத்தின் மீதான தாக்குதல் பாணியை கையாளும் கில்லாடியான இங்கிலாந்து அணி இந்த தொடரில் மட்டும் 12 கோல்களைப் போட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மகுடம் சூடி உள்ள இத்தாலி அணிக்கு  ரூ.89 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. போட்டி கட்டணம்,லீக் சுற்று, நாக் அவுட் சுற்று வெற்றிகள் எல்லாவற்றையும் சேர்த்தால் மொத்தத்தில் கிட்டத்தட்ட ரூபாய் 300 கோடியை இத்தாலி அணி பரிசாக வென்றுள்ளது. போட்டியின் 67-வது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் போனுக்சி அடித்த கோல் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்து வெற்றியை நிர்ணயித்தது.

யூரோ இறுதிப் போட்டியில் மிக வயது முதிர்ந்த கோல் அடித்தவரான போனுக்சி இறுதிப் போட்டி வரலாற்றில் அதிக அளவில் பங்கேற்றவர் என்ற பெருமையை கொண்டவர். இவருக்கு வயது 34 ஆகும். இவர் போட்டியின் நடுவில் இங்கிலாந்து ரசிகர்களை நோக்கி நிறைய சாப்பிட வேண்டும். நிறைய சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என கிண்டலாக கூறியுள்ளார். அதன் பின்னர் கேமரா ஒன்றின் முன்னால் நின்று கோப்பை ரோம் நகருக்கு வந்து கொண்டிருக்கிறது என்றும் கூறி இங்கிலாந்து ரசிகர்களை மிகவும் கடுப்பேற்றி உள்ளார்.

யூரோ கோப்பையை ஜெர்மனி மூன்று முறை ஸ்பெயின் மூன்று முறை பிரான்ஸ் 2 முறை ஆகியவற்றுக்கு அடுத்து அதிக முறை வென்ற பட்டியலில் இத்தாலி நான்காம் இடம் பிடித்துள்ளது. 53 ஆண்டு இடைவெளிக்குப் பின் இந்த சாதனை ஏற்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version