பள்ளிக்கல்வித்துறை செய்த குளறுபடி!! அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை திடீர் நிறுத்தம்!!
காரைக்குடி மாவட்டத்தில் உள்ள ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளியில் போதுமான கட்டிட வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் பெரும் இட நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
இதனால் ஆறாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. இப்பள்ளி 2013-ஆம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, 55 ஆசிரியர்கள் மற்றும் 1,600 –க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளால் இயங்கி வருகிறது.
இருப்பினும் பள்ளியில் மாணவர்களுக்கு போதுமான இட வசதி இல்லாததால் நெருக்கடியில் தினமும் அவதி படுகின்றனர். மேலும் மாணவர்களுக்கென ஒரு கழிப்பறையும், மாணவிகளுக்கு இரண்டு கழிப்பறைகளும் மட்டுமே உள்ளன.
பள்ளியில் மைதான வசதி அமைக்கப்படவில்லை. இருப்பினும், ஒவ்வொரு வருடமும் பத்தாம் வகுப்பில் 100 சதவிகித தேர்ச்சியை பெற்றுத் தருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் முந்தி கொள்வார்கள்.
ஆனால் கட்டிட வசதி இல்லாத காரணத்தால் இட நெருக்கடிகள் ஏற்படும் நிலையில் தற்போது ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கை குறைந்து காணப்படுகிறது.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக இப்பள்ளியில் 400 –க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 220 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர். கட்டிட வசதியை காரணம் காட்டி ஏராளமானோர் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் புதிதாக 5 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தை கட்ட தொடங்கி பல நாட்கள் ஆகியும் இதன் பணி இன்னும் நிறைவு பெறவில்லை.