அடுத்த பாஜக ஐடி விங் தலைவர் சவுக்கு சங்கர் தான்.. நன்றி கூறி பரபரப்பு டிவீட்!! வெளிவந்த திடீர் அறிக்கை!!
ஈரோடு இடைத்தேர்தலுக்கு பிறகு தமிழக கட்சிகளுக்கு இடையே பரபரப்பான சூழல் நிலவு வருகிறது. அந்த வகையில் பாஜகவில் நீண்ட நாள் நிர்வாகியாக பொறுப்பில் இருந்தா பாஜக ஐடி வின் தலைவர் சிடிஆர் நிர்மல் ராஜினாமா செய்வதாக கூறி தற்பொழுது அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைந்துள்ளார். ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் அவர்களும் பாஜக விலிருந்து விலகி தற்பொழுது அதிமுக எடப்பாடி உடன் இணைந்துள்ளார்.
இவ்வாறு ஒருவருக்கு பின் ஒருவராக பாஜக கட்சியை விட்டு விலகி அதிமுகவில் இணைந்து வருவதால் இந்த முக்கிய பதவிக்கு அண்ணாமலை யாரை அமர்த்த போகிறார் என்றும் கேள்வி பெரும் அளவில் இருந்தது.சமீப காலமாக பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பது போல யூடியூப் சவுக்கு சங்கர் பேசும் வீடியோ பலவற்றை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஸ்ரீமதி கொலை வழக்கில் கூட முதலில் பாஜக மீது குற்றம் சாட்டி விட்டு, பின்பு பள்ளியை பார்வையிட்டு வந்தவுடன் கதையை திருப்பி போட்டு பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து பேசி வந்ததும் அனைவரும் அறிந்ததே.
இதை வைத்து பார்க்கையில் ஐடி வின் தலைவராக சவுக்கு ஷங்கர் நியமிக்கப்படலாம் என்று பேச்சு அடிபட்டது. அதற்கேற்றார் போல் இன்று அண்ணாமலை வெளியிட்டது போல ஓர் அறிக்கை ஒன்று வைரலாகி வருகிறது.அதில் பாஜக ஐடி விங் தலைவராக சவுக்கு சங்கர் என கூறியதை அடுத்து, ஓர் பத்திரிக்கை ஊடகம் இதனை லைவ் நியூஸ் ஆகவும் போட ஆரம்பித்தது. இதனை கண்ட சவுக்கு சங்கர் எந்த லட்சணத்தில் இந்த டிவி இருக்குன்னு பாருங்க என கூறி ட்வீட் போட்டுள்ளார். அதுமட்டுமின்றி இவ்வாறு பொய்யான தகவலை பரப்பிய டிஎம்கே ஐடிவிங்க்கு நன்றி என்றும் கூறியுள்ளார். மேலும் இது குறித்து பாஜக விடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார்.