ஆசிரியர்களுக்கு விழுந்த அடுத்த அடி!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தில் கோடை வெயில் மிகவும் அதிகமாக இருந்ததன் காரணமாக பள்ளிகள் அனைத்தும் தாமதமாக திறக்கப்பட்டது. அதாவது ஜூன் மாதம் ஒன்றாம் தேதி திறக்க இருந்த பள்ளிகள் அனைத்தும் முதலில் ஜூன் ஏழாம் தேதி திறக்கும் என்று கூறப்பட்டது.
அதன் பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு ஜூன் 12 தேதி அன்றும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கு ஜூன் 17 ஆம் தேதி அன்றும் திறக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்களுடைய வருகைப்பதிவை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தபட்டது.
ஆனால், 2020 ஆம் ஆண்டு கரோனா தொற்று நாட்டையே உலுக்கி கொண்டிருந்தது. எனவே, இந்த காலக்கட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதித்தது.
எனவே, இதனால் இந்த பயோ மெட்ரிக் முறையை பள்ளிகளில் ஆசிரியர்களால் கடைபிடிக்க முடியவில்லை. தற்போது மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த பயோ மெட்ரிக் முறையை பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளிலும் கொண்டு வந்துள்ளது.
இதன் மூலமாக ஆசிரியர்கள் பள்ளிக்குள் வரும் நேரத்தையும் பள்ளியை விட்டு வெளியேறும் நேரத்தையும் சென்னையில் இருந்துக் கொண்டே கண்காணிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு விரைவாக பாடத்திட்டங்களை முடிக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது.