அதிரடியாக கேப்டனை மாற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்! புதிய கேப்டன் யார் தெரியுமா?

0
808
The Pakistan Cricket Board changed the captain in action! Do you know who the new captain is?
அதிரடியாக கேப்டனை மாற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்! புதிய கேப்டன் யார் தெரியுமா?
ஐசிசி உலகக் கோப்பை தொடர் முடிந்துள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனை நியமித்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா, அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்த பிரிவில் பாகிஸ்தான் அணியும் இடம் பிடித்தது. லீக் சுற்றில் முதல் போட்டியில் இந்திய அணியை சந்தித்த பாகிஸ்தான் அணி சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை குறைவான ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. அதன் பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியால் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது.
அதே போல பாகிஸ்தான் அணி தன்னுடைய இரண்டாவது பெட்டியில் அமெரிக்காவிடம் தோல்வியை தழுவியதால் சூப்பர். 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் பாகிஸ்தான் அணி ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடரை விட்டு வெளியேறியது. இதனால் அப்பொழுது பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த பாபர் அசம் மீது விமர்சனங்கள் எழுந்தது.
இதையடுத்து பாகிஸ்தான் அணி அக்டோபர் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் மாதம் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரையிலும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 15 முதல் அக்டோபர் 19ம் தேதி வரையிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24 முதல் அக்டோபர் 28 வரையிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக ஷான் மசூத் செயல்படுவார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் அறிவித்துள்ளது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் யார் என்பதை இன்னும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் கூறாமல் இருக்கின்றது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு பாபர் அசம் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளதால் தற்பொழுது அவர் கேப்டனாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.