இந்தியாவில் கோடை விடுமுறையில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. ஆனால் தற்போது இந்தியாவில் இந்த தொடரை நடத்த முடியாத சூழ்நிலை காரணமாக போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்றுவிட்டனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சேர்க்கப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த கேரி குர்னேவுக்கு பதிலாக 29 வயதான முகமது ஹசன் அலிகான் சேர்க்கப்பட உள்ளார். ஐ.பி.எல். நிர்வாகத்தின் அனுமதிக்காக கொல்கத்தா அணி காத்திருக்கிறது. ஐ.பி.எல். நிர்வாகம் அலிகானுக்கு அனுமதி அளித்தால் ஐ.பி.எல்.லில் விளையாட உள்ள முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.