Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இரண்டாவது ஆஷஸ் கிரிக்கெட் போட்டி! போராடி தோல்வி பெற்ற இங்கிலாந்து அணி!!

இரண்டாவது ஆஷஸ் கிரிக்கெட் போட்டி! போராடி தோல்வி பெற்ற இங்கிலாந்து அணி!!

 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி போராடி தோல்வி பெற்றுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

 

கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் சதம் அடித்து 110 ரன்களும் டேவிட் வார்னர் அரைசதம் அடித்து 66 ரன்களும் சேர்த்தனர். இங்கிலாந்து அணியில்  முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சில் பிராட், ஜோஸ் தங்க் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

416 ரன்கள் பின்னிதங்கிய நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியில் முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக அரைசதம் அடித்து டக்கெட் 98 ரன்களும், ஹேரி பிரூக் 50 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணியில் முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஹசல்வுட், ஹெட் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

இதையடுத்து 91 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக உஸ்மான் க்வாஜா அரைசதம் அடித்து 77 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணியில் இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சில் ஸ்டூவர்ட் பிராட் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

ஏற்கனவே 91 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆஸ்திரேலிய அணி 279 ரன்கள் குவித்ததால் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 370 ரன்களாக இருந்தது. இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

 

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேக் கிர்வ்லி 3 ரன்களுக்கும் போப் 3 ரன்களுக்கும், ரூட் 18 ரன்களுக்கும் பிரூக் 4 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து மற்றொரு முனையில் சிறப்பாக விளையாடி வந்த தொடக்க வீரர் டக்கெட்டுடன் சேர்ந்து பென் ஸ்டோக்ஸ் ரன் குவிப்பில் இறங்கினார்.

 

பென் டக்கெட் அரைசதம் அடித்து 83 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்தார். பென் ஸ்டோக்ஸ் ஒரே ஓவரில்  மூன்று சிக்சர்களும் ஒரு பவுண்டரியும் அடித்து சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

 

அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் எடுத்து தோல்வி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் இரண்டாவது இன்னிங்ஸில் பந்தவீச்சில்  பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹசல்வுட் தலா  3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

இதயைடுத்து இரண்டாவது அஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்கிரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித் ஆட்டநாயகன் விருதை வென்றார். இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளில் வென்று 2 – 0 என்ற புள்ளிக் கணககில் முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜூலை 6ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

 

Exit mobile version