Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இரண்டாவது டெஸ்ட் போட்டி! இந்தியா முன்னிலை!

The second test match! India lead!

The second test match! India lead!

இரண்டாவது டெஸ்ட் போட்டி! இந்தியா முன்னிலை!

வங்காள தேசத்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் சாட்டிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. வங்காள தேச அணி     பாலோ- ஆன் ஆனது.

இதனையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் தொடங்கியது. இரண்டு போட்டிகளிலும் கேப்டன் ரோகித் சர்மா கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை. முதலில் டாஸ் வென்ற வங்காள அணியின் கேப்டன் ஷஹிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி வங்காளத்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹுசைன் சாண்டோவும் இறங்கினர். ரன்கள் குவிக்க தொடங்கும் முன்னரே ஜாகிர் 15 ரன்னில் உனத்கட் பந்தில் பிடிபட்டார். நஜ்முல் 24 ரன்களில் வெளியேறினார்.

உமேஷ் ஸ்விங் தாக்குதலிலும், அஸ்வின் வேக பந்திலும் வங்காளதேச அணி வீரர்களை நிலை குலைய வைத்தனர். விக்கெட் வீழ்ந்தாலும் மறுபுறம் முன்னாள்  கேப்டன்   மொமினுள் ஹக் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார்.இவர் வங்காளம் 200 ரன்கள் குவிக்க உதவி அஸ்வின் பந்து வீச்சில் காலியானார்.

முதல் இன்னிங்க்ஸ் முடிவில் வங்காளம் 73.5 ஓவரில் 227 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அடுத்து தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ரிசப்-பந்த் 93, ஸ்ரேயாஸ் ஐயர் 87 அணி நிலைத்து ஆடியதால் ஸ்கோர் உயர்ந்தது. இதன்படி முதல் இன்னிங்க்ஸ் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளினையும் இழந்து 86.3 ஓவரில்  314 ரன்கள் குவித்து 87 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனையடுத்து வங்காளம் தனது இரண்டாவது இன்னிங்க்ஸ் ஐ தொடர்ந்து ஆடி வருகின்றது. தற்போது வங்காளம் 7 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி விளையாடி வருகின்றது.

Exit mobile version