திடீரென கடைகள் இடிந்து விழுந்த சம்பவம்!! பொதுமக்கள் பதற்றம்!!
சென்னையில் தற்போது ஏராளமான சாலைகளில் மெட்ரோ ரயிலுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு, அல்லது மழைநீர் வடிகாலுக்காக பள்ளங்களை தோண்டி வைத்திருக்கிறார்கள்.
இதனால் போக்குவரத்து நெரிசல்கள் மிகுந்து காணப்படுகிறது. தினமும் காலையில் வேலைக்கு செல்வோர்கள், பள்ளிக்கு, கல்லூரிக்கு என்று ஏராளமானோர் வாகனங்களில் பயணிக்கின்றனர்.
இதேப்போல் மாலை நேரங்களிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. அந்த வகையில், தற்போது மழைநீர் வடிகால் பணியின் போது சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் கடைகள் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் பத்து மணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. எனவே, பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். வடகிழக்கு பருவமழை வருவதற்கு முன்பே இந்த மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.
இந்த பணிகள் நடைபெறும் இடத்தை சுற்றி பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் சனிக்கிழமை இரவு இந்த பள்ளம் தோண்ட ஆரம்பித்தனர்.
ஞாற்றுக்கிழமை அதிகாலையில் பொக்லைன் வண்டி கொண்டு இந்த பள்ளங்களை தோண்டும்போது, அருகில் இருந்த மூன்று கடைகள் திடீரென இடிந்து விழுந்தது.
இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல் துறையினருக்கும் இது தொடர்பாக தகவல் கொடுக்கப்பட்து. எனவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் இடிந்து விழுந்த இடங்களை பார்வையிட்டனர்.
மேலும், இதனால் இடிபாடுகளை அகற்றும் வேலையில் தீ அணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.