மூன்றாவது டி20 போட்டி! டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தொடரை வெல்லுமா?
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. ஏற்கனவே முடிந்த இரண்டு டி20 போட்டிகளில் ஒன்றில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்திலும் பூனேயில் நடந்த மற்றொரு இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று சமமாக உள்ளன. இன்று நடக்கும் போட்டியானது தொடரை வெல்வதற்கான போட்டியாகும்.
முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது ஆட்டத்தில் சற்று சொதப்பி தோல்வியை தழுவியது. இதில் அர்ஷ்திப் சிங் மோசமான பந்து வீச்சு காரணமாக இந்திய அணி தோல்வியை தழுவியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இரண்டு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இதில் வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்கும் மற்றும் தொடரை வெல்லும் மூன்றாவது மூன்றாவது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்க இருக்கிறது. இதில் வெல்லும் அணி வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.
இதில் தற்போது டாஸ் போடப்பட்டதில் இந்திய அணி வெற்றி பெற்று டாஸ் வென்று இலங்கை அணிக்கு எதிராக பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்று நடக்கும் ஆட்டத்தில் யாருக்கு வெற்றி என்பது தெரிந்து விடும். இரு அணிகளும் சமமாக இருப்பதால் வெற்றி பெறும் முனைப்பில் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.