அல்ட்ரா மாடாலக மாறும் திருப்பதி கோவில்!! நடந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!!
பொதுமக்கள் அதிக அளவில் செல்லும் கோவில்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது.
இவ்வாறு இருக்கும் கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள்.
மேலும் திருப்பதிக்கு அண்டை மாநிலத்தவர்களும் அதிக அளவில் வருவார்கள்.இந்தநிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
இதில் மட்டும் நாள் ஒன்றிற்கு கிட்டத்தட்ட 1 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர்.தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகின்றது.
இந்த வகையில் நாள் தோறும் செல்லும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மட்டும் தினசரி 5 கோடி ரூபாயை நெருங்கி உள்ளது.அதிலும் சிறப்பு நாட்களில் 10 கோடி ரூபாயை நெருங்கிகிறது.இதனால் அந்த காணிக்கையை பகதர்கள் போடுவதற்கு என்று பெரிய பித்தளை அண்டாக்கள் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சிலர் பணத்தை போடுவது போன்று திருடுகின்றனர் என்று புகார் வந்தது.இதனை தடுக்கும் விதமாக புதிய உண்டியல் மாடல்கள் அறிமுகப்பட உள்ளது .மேலும் இந்த உண்டியலை வேறோர் இடத்திற்கும் நகர்த்த முடியும்.
மேலும் இதில் இருந்து பணத்தை திருட முடியாத அளவிற்கு பாதுகாப்பான முறையில் இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்ட உள்ளது.இதன் முதற்கட்டமாக சுமார் 5 உண்டியல் அமைக்கப்பட உள்ளது.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் அதிக பட்ச உண்டியல்களை அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.இந்த பணிகள் அனைத்தும் கூடிய விரைவில் செய்து முடிக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.