சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி!!! இன்று டிக்கெட் விற்பனை தொடக்கம்!!!

0
186

சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி!!! இன்று டிக்கெட் விற்பனை தொடக்கம்!!!

சென்னையில் நடைபெறும் நடபாண்டுக்கான உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று(ஆகஸ்ட்31) தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடர் அகாடோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தாண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பத்து நாடுகள் பங்கேற்று விளையாடவுள்ளது.

இதுவரை மற்ற நாடுகளுடன் இணைந்து போட்டியை நடத்தி வந்த இந்தியா தற்பொழுது தனியாக இந்த உலகக் கோப்பை தொடரை நடத்தவுள்ளது. குஜராத் மாநிலம் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடவுள்ளது.

உலகக் கோப்பை தொடரில் நடைபெறும் போட்டிகளை காண்பதற்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே புக் மை ஷோ இணையதளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.

இதையடுத்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான.டிக்கெட் விற்பனை இன்று(ஆகஸ்ட்31) இரவு 8 மணிக்கு புக் மை ஷோ இணையதளத்தில் தொடங்கப்படவுள்ளது. சென்னையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்த போட்டி அக்டோபர் மாதம் 8ம் தேதி நடைபெறவுள்ளது.

மாஸ்டர் கார்ட் பயனாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த டிக்கெட்டுகள் அனைத்தும் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி அன்று விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அக்டோபர் 14ம் தேதி நடைபெறும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கான போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ளது.