Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கேதான்! ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு! 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கேதான்! ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு! 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறும் இடத்தை ஐசிசி என்று அறிவித்துள்ளது.

தற்போது உள்ள நிலவரப்படி டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா 75.56 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 58.93 சதவீத புள்ளியுடன் 2-வது இடத்திலும் உள்ளன.

இந்த ஆண்டிற்கான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகின்ற ஜூன் மாதம் 7-ஆம் தேதியிலிருந்து 11-ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் இந்த போட்டியானது இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ததற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கான  வாய்ப்பில் நீடிக்கின்றன. நியூசிலாந்து இங்கிலாந்து உட்பட ஐந்து நாடுகள் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்துவிட்டன.

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி பட்டத்தை தட்டி சென்றது. இதையடுத்து அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7ஆம் தேதியில் இருந்து 11-ஆம் தேதிக்குள் இங்கிலாந்தில் நடைபெற  உள்ளதாக ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

 

Exit mobile version