வேகத்தடையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா!! முழு விவரங்கள் இதோ!!

0
149

வேகத்தடையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா!! முழு விவரங்கள் இதோ!!

அனைத்து சாலைகளிலும் இருக்கின்ற ஒன்றுதான் வேகத்தடை. வாகனம் அளவுக்கு மீறி வேகமாக செல்வதை தடுப்பதற்காகவும் விபத்து ஏற்படுவதை நிறுத்துவதற்காகவும் இந்த வேகத்தடை அனைத்து பகுதிகளிலும் கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி சில முக்கிய தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

ஒரு வேகத்தடை என்பது 3.7 மீட்டர் அகலத்திலும் 10 சென்டிமீட்டர் நீளத்திலும் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சில இடங்களில் 20 அல்லது 30 மீட்டர் நீளத்திலும், 1.5 மீட்டரில் இருந்து 3 மீட்டர் வரை அகலத்திலும் போடப்பட்டிருக்கிறது.

இதனால்தான் சில வேகத்தடைகளில் வாகனம் செல்லும் போது டப் டப் என்று அடிக்கிறது. இந்த வேகத்தடையில் பொதுமக்கள் சிலர் பொறுமையாக செல்லாமல் வேகத்தடை மீதிலும் வேகமாக தான் செல்கிறார்கள். இதனால் வண்டி ஓட்டுபவர்களையும் முழுவதுமாக குற்றம் கூற முடியாது. வேகத்தடை போட்டவர்கள் மீதும் சில தவறுகள் இருக்கிறது.

அதாவது வேகத்தடை வருவதற்கு 40 சென்டிமீட்டருக்கு முன்பே இங்கு வேகத்தடை உள்ளது என்று ஒரு போர்டை வைத்திருக்க வேண்டும். மேலும் அது வேகத்தடை என்று தெரிவதற்காக அதன்மீது வெள்ளை நிற பெயிண்டை அடித்திருக்க வேண்டும். இரவு நேரங்களில் வேகத்தடை நன்கு தெரிவதற்காக எம்போடெட் கேட் லைட் கண்டிப்பாக பொருத்தி இருக்க வேண்டும்.

இதை சில வேகத்தடைகளில் மட்டுமே செயல்படுத்தி வருகிறார்கள். சில வேகத்தடைகளில் இது போன்ற முன்னெச்சரிக்கை அறிகுறிகள் கிடையாது. நமக்கு ஏதேனும் ஒருவரிடத்தில் வேகத்தடை வேண்டுமென்றால் அதை தாராளமாக நாம் கேட்பதற்கு நமக்கு உரிமைகள் உள்ளது.

அதற்கு முதலில் ரோடு இன்ஸ்பெக்டர் இடம் சென்று எதற்காக அந்த இடத்தில் வேகத்தடை வேண்டும் என்று ஒரு மதிப்பு மிக்க காரணத்தை சொல்லி வேகத்தடை போடுவதற்கு அனுமதி வாங்க வேண்டும். காரணம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தால் உடனடியாக நாம் கூறுகின்ற இடத்தில் அவர்கள் வேகத்தடை போட நடவடிக்கை எடுப்பார்கள்.

ஒருவேளை நாம் கூறியும் அவர்கள் வேகத்தடை போடுவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் நாமாகவே வேகத்தடையை அமைத்துக் கொள்ளலாம். ஆனால் அதை சரியான நாம்ஸ் படி சரியான நீளம் மற்றும் அகல அளவில் வேகத்தடையை அமைக்க வேண்டும். இல்லையென்றால் அது சட்ட விரோதமாக போடப்பட்ட வேகத்தடை என்று கூறி விடுவார்கள்.

அதாவது எந்தெந்த இடங்களில் வேகத்தடை போட வேண்டும் என்று ஒரு லிஸ்ட் உள்ளது. அதை தவிர்த்து நாம் வேகத்தடை தேவைப்படாத ஒரு இடத்தில் போட்டால் அதை சட்டவிரோதமாக போட்ட வேகத்தடை என்று கூறி விடுவார்கள்.

இதுபோல தேவையற்ற இடங்களில் வேகத்தடை போட்டதால் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 9,900 விபத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலும், 2,800 இந்த வேகத்தடையால் இறந்துள்ளனர்.

இதே போல 2011 ஆம் ஆண்டில் டெல்லியைச் சேர்ந்த ஒரு நபர் சட்டவிரோத வேகத்தடையால் விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டார். இதனால் இவரின் குடும்பத்திற்கு டெல்லி அரசனது ஒரு லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே சட்ட விரோதமாக எந்தெந்த இடங்களில் வேகத்தடைகள் உள்ளதோ அதையெல்லாம் உடனடியாக நீக்கிக் கொண்டு வருகிறார்கள். இந்த வேகத்தடைகள் எந்தெந்த பகுதிகளில் முக்கியமாக இருக்க வேண்டும் என்றால், பள்ளிகள் கல்லூரிகள் மருத்துவமனைகள் மற்றும் டி வடிவம் கொண்ட சாலைகள் போன்ற இடங்களில் நிச்சயமாக வேகத்தடை இருக்க வேண்டும்.

இதே போல் ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து சுங்கச்சாவடிகளுக்கு முன்பாகவும் வேகத்தடைகள் நிச்சயமாக இருக்க வேண்டும். மேலும் இந்த வேக தடைகளில் நிறைய வகைகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.