அரசு பேருந்து தனியார் மயமாக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை!! அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!
பொதுமக்கள் பெரிதும் பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் அரசு பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த அரசு பேருந்து மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.இவ்வாறு பெரும் அளவில் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளும் இனி தனியார் மயமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானதால் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதன்பின் அமைச்சர் சிவசங்கர் கூறியது,தற்பொழுது தமிழகத்தில் போக்குவரத்து கழகத்தில் அதிக எண்ணிக்கையில் காலி பணியிடங்கள் உள்ளது.
இந்த வகையில் 625 போக்குவரத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.மேலும் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பமும் பெறப்பட்டது.
இன்னும் ஒரு வாரத்தில் அந்த பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.இப்பொழுது போக்குவரத்து துறையில் உள்ள அனைத்து இடங்களும் தகுதி உடையவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அரசு போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்பட என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அரசு பேருந்துகள் எப்பொழுது தமிழக மக்களுக்கு சேவை அளிப்பதற்காக தொடங்கபட்டது இது ஒரு பொழுதும் தனியாரிடம் விடப்படாது என்றார்.
இது மட்டும்மலாமல் தமிழக மக்களின் நலன் கருதி 4200 புதிய பேருந்துகள் வாங்க போக்குவரத்து துறை அதிகாரிகள் சார்பில் முடிவு எடுக்கப்பட்டு அதற்கான டெண்டர் வெளியிடப்பட்டு வருகின்றது என்றார்.