Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான்! கொல்கத்தா அணி வீரர் டுவீட்!!

#image_title

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான்! கொல்கத்தா அணி வீரர் டுவீட்!
தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடி வரும் வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து பேசியுள்ளனர். இது தொடர்பாக கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்தி ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான் என்று டுவீட் செய்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சுழல்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மற்றும் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை நேரில் அதுவும் அவரது வீட்டில் சந்தித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து சந்திப்பிற்கு பிறகு கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்த்த வருண் சக்கரவர்த்தி “தினமும் இரவு வானத்தில் பல நட்சத்திரங்களை பார்க்கலாம். ஆனால் சூப்பர் ஸ்டாரை சந்திப்பது என்பது வாழ்நாள் நிகழ்வு. அது நடந்துவிட்டது. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான். அது ரஜினிதான்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்தி ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்தான் அதும் ரஜினிதான் என்று பதிவிட்டது தில் ராஜூ அவர்களை நியாபகப்படுத்துகின்றது.
Exit mobile version