மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம்!! 35 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி!!

0
169
Third day's play affected by rain!! England team leading by 35 runs!!
மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம்!! 35 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி!!
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் மழை பெய்ததால் மூன்றாம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது.
பெர்மிங்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில்  8 விக்கெட்டுகளை இழந்து 393 ரன்கள் அடித்து, முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 118 ரன்களும் பேரிஸ்டோ 78 ரன்களும் ஜேக் க்ராவ்லி 61 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணியில் நாதன் லயன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
393 ரன்கள் பின்னிதங்கிய நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 386 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய அணியில் முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக உஸ்மான் க்வாஜா 141 ரன்களும், அலக்ஸ் கேரி  66 ரன்களும், டிராவியாஸ் ஹெட் 50 ரன்களும் சேர்த்தனர். இங்கிலாந்து அணியில் பந்து வீச்சில் பிராட், ராபின்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் மொயீன் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை இங்கிலாந்து தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது மழை குறுக்கிட்டதால் மூன்றாம் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
இரண்டாவது இன்னிங்ஸில் மூன்றாவது நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 28 ரன்கள் அடித்து 35 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியில் ஜேக் க்ராவ்லி 7 ரன்களும் பென் டக்கெட் 19 ரன்களும் அடித்து ஆட்டம் இழந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ், போலன்ட் இருவரும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.