Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூன்றாவது ஒருநாள் தொடர்! ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா இந்தியா? 

மூன்றாவது ஒருநாள் தொடர்! ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா இந்தியா? 

நியூசிலாந்துடன் நாளை நடக்க இருக்கும் கடைசி ஒரு நாள் போட்டியில் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகளில் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

முதலாவதாக இந்திய அணி ஹைதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்திலும் ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்திலும் வென்று தொடரை கைப்பற்றியது. இடையே இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் இந்தூர் ஸ்டேடியத்தில் நாளை நடக்க இருக்கிறது.

சொந்த மண்ணில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழ்ந்து வருகிறது. நாளை நடைபெறும் மூன்றாவது போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன்  இந்தியா உள்ளது.

இந்திய அணியில் பேட்டிங்கில் தற்போது சுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா, மற்றும் சூரியகுமார் யாதவ், ஆகியோர் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல் பந்துவீச்சை பொறுத்தவரை முகமது ஷமி, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர்.

டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் போட்டியில் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடியது. இரண்டாவது போட்டியில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கட்களையும் இழந்து படுதோல்வியை அடைந்தது. இதனால் நாளை நடைபெறும் கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெறுமா?என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான நாளைய போட்டி 116வது போட்டியாகும். இதுவரை நடந்த 115 போட்டிகளில் 57 இல் இந்திய அணியும், 50-இல் நியூசிலாந்து அணிகளும் வெற்றி பெற்றன. ஏழு போட்டிகளில் முடிவு இல்லை. ஒரு போட்டி டை ஆனது. நாளை நடைபெறும் போட்டி பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்க இருக்கிறது.

Exit mobile version