Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இது என்னப்பா ஸ்டாலினுக்கு வந்த புது தலைவலி!! 2 லிஸ்ட் தயாராகி வருகிறதாம்!! ரவுண்டு கட்டி அடிக்கும் எடப்பாடியார்!!

#image_title

இது என்னப்பா ஸ்டாலினுக்கு வந்த புது தலைவலி!! 2 லிஸ்ட் தயாராகி வருகிறதாம்!! ரவுண்டு கட்டி அடிக்கும் எடப்பாடியார்!!

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் உள்ளிட்ட பல கண்ணை கவரும் வாக்குறுதிகளை அள்ளி தெளித்து ஆட்சியை பிடித்தது திமுக. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் திமுக கொடுத்த வாக்குறுதிகள் பல நிறைவேற்றாமல் இருந்தது. அதில் ஒன்று தான் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்.

சொன்னதை செய்யாத திமுகவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கவே வெறு வழியின்றி மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஸ்டலின் முடிவெடுத்தார். இந்த திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்று பெயர் சூட்டி கடந்த ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் இறுதி வரை இந்த திட்டத்திற்கு தகுதி வாய்ந்த பயனர்களை தேர்வு செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த திட்டத்திற்கான முழு பணிகளும் முடிந்து கடந்த செப்டம்பர் மாதம் 15, அண்ணா பிறந்த நாளன்று முதல்வர் ஸ்டலின் அவர்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தில் பயன்பெற சுமார் 1 கோடியே 70 லட்சம் பேர் விண்ணப்பம் செய்த நிலையில் 1கோடியே 6 லட்சம் பேரை மட்டுமே தமிழக அரசு இந்த திட்டத்திற்கான பயனாளர்களாக தேர்வு செய்தது.

இதனால் சுமார் 64 லட்சம் போர் அதிர்ச்சி கலந்த ஏமாற்றம் அடைந்தனர். பொய்யான வாக்குறுதிகளை அள்ளி விட்டு ஆட்சியை பிடித்து விட்டார் என்ற விமர்சனம் ஸ்டலின் மீது எழத் தொடங்கியது.

இதன் பின்னர் நிராகரிகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு சுமார் 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்த நிலையில் அவர்களில் வெறும் 7 லட்சம் பேரின் விண்ணப்பங்களை மட்டுமே அரசு ஏற்றுக் கொண்டது. இதனால் இந்த திட்டத்தில் சேர தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்ட குடும்ப தலைவிகள் ஆளும் திமுக அரசு மீது கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதுமட்டும் இன்றி இந்த திட்டத்தில் பயன்பெற தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெரும்பாலானோர் திமுகவை சேர்ந்தவர்கள் என்ற தகவல் உலா வந்த வண்ணம் உள்ள நிலையில் தற்பொழுது இந்த விகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வர எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் களத்தில் இறங்கி இருப்பதாக தெரிய வருகிறது.

திமுக மகளிர் அணியில் இருக்கும் பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற்று இருக்கிறார்கள் என்பது தற்பொழுது அம்பலமாகி இருக்கிறது. அதேபோல் தகுதி இருந்தும் பல பெண்கள் நிராகரிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்த நிலையில் அதனை மக்களுக்கு ஆதாரத்துடன் நிரூபிக்க எடப்பாடியார் களத்தில் இறங்கி இருக்கிறார். இதற்காக 2 லிஸ்ட் தயராகி கொண்டிருக்கிறது. விரைவில் ஆதாரத்துடன் வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த திட்டத்தில் சேர தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்ட பெண்கள் திமுக மீது கடும் கோபத்தில் இருக்கும் நிலையில் ஒருவேளை ஸ்டாலின் அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தில்லுமுல்லு செய்தது வெளிச்சத்திற்கு வந்தால் அவை நிச்சயம் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version