இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. மேலும் இந்த தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் சொதப்பலாக விளையாடினாலும் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. இதில் முதல் இன்னிங்ஸில் 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் 175 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளும் ஒரு ஒரு புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் மூன்றாவது போட்டியில் வெல்வோர் தொடரை வெல்வார். எனவே மூன்றாவது போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது போட்டியானது பிரிஸ்போன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் போட்டி நடைபெறும் அந்த 5 நாட்களும் மழை பொழிய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் போட்டி ரத்தாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.