Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என்னடா இது இந்திய அணிக்கு வந்த புதிய சோதனை!! குழப்பத்தில் தவிக்கும் கம்பீர்.. இரண்டாவது போட்டியில் திடீர் மாற்றம்!!

This is a test for the Indian team

This is a test for the Indian team

cricket: இந்திய அணியில் தற்போது திரும்பியுள்ள ரோஹித் சர்மா,கே எல் ராகுல்  மற்றும் சுப்மன் கில் இவர்களில்  யார் எந்த வரிசை என்ற குழப்பம் நிலவி வருகிறது.

இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் சமீபத்தில் முதல் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த முதல் போட்டிக்கு தற்காலிக கேப்டனாக பும்ரா செயல்பட்டார்.

குடும்ப காரணத்திற்காக முதல் போட்டியில் கலந்து கொல்லாத ரோஹித் சர்மா இரண்டாவது போட்டிக்கு வந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த இரண்டாவது போட்டியில் அவர் தான் கேப்டனாக அணியில் விளையாடுவார். மேலும் கில் காயம் குணமடைந்து தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்.

இதில் தான் வந்துள்ளது சிக்கல் முதல் போட்டியில் கே எல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது ஜெயஷ்வாலுடன் யார் களமிறங்குவது என்ற சிக்கல் எழுந்துள்ளது. ரோஹித் சர்மா நிச்சயம் தொடக்க வீரராக தான் களமிறங்குவார் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். மேலும் பயிற்சி போட்டியில் 6 வதாக களமிறங்கி 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கில் அரை சதம் விளாசினார் இப்படி இருக்கும் நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் கே எல் ராகுல் மூன்றவதாக களமிறக்கப்படுவாரா? அல்லது 6 வதாக களமிறக்கப்படுவாரா?  என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இரண்டாவது போட்டியானது டிசம்பர் 6 அடிலெய்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Exit mobile version