இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. மேலும் இந்திய அணி நடந்து முடிந்த 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பானது குறைந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்ட 4 வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நிலையில் சரியான பேட்டிங் செய்யாத காரணத்தால் தோல்வியை தழுவியது. இந்த போட்டிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீதான விமர்சனம் கடுமையாக அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய அணி க்கு கடைசி வாய்ப்பாக இந்த 5வது போட்டியை பார்க்கப்படுகிறது மேலும் இந்த போட்டியில் வென்றால் 2-2 என்ற நிலையில் சமனில் முடிவடையும் எனினும் அடுத்து ஆஸ்திரேலிய அணி மோதவுள்ள இலங்கை தொடரில் இலங்கை அணி 1-0 அல்லது 2-0 என்ற விகித்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும். எனவே இந்திய அணி க்கு இந்த 5 வது போட்டிதான் கடைசி வாய்ப்பாக பார்க்கபடுகிறது. நாளை தொடங்கவுள்ள இந்த 5 வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.