உதவித் தொகை பெற விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!! மாணவர்களே உடனே முந்துங்கள்!!
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினம் மாணவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை தமிழக மற்றும் மத்திய அரசானது செய்து வருகிறது. அந்த வகையில் அவர்கள் படிக்கும் பள்ளியில் அனைத்து வசதிகளுடன் இலவசமாக விடுதியில் தங்குவது என தொடங்கி பல திட்டங்கள் தற்பொழுது வரை அமலில் உள்ளது.
அதேபோல ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டிற்கான உதவித்தொகை பெறுவது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.
இத்திட்டத்தைப் பெற்று பயனடைய ஜனவரி 1 முதல் மே மாதம் வரை மாணவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
இருப்பினும் பெரும்பாலான மாணவர்கள் தற்பொழுது வரை விண்ணப்பிக்காமல் இருப்பதால் இம்மாதம் இறுதிவரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுத்துள்ளனர்.
இதனை உபயோகித்துக் கொண்டு பழங்குடி மற்றும் ஆதிதிராவிட மாணவர்கள் உடனடியாக இணையத்தின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.