இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என ஆஸ்திரேலியாவுடன் மோத களமிறங்கியது இந்திய அணி ஆனால் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த தொடரில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடி ரன் குவிக்கவில்லை. மேலும் பந்துவீச்சில் பும்ரா மட்டும் சிறப்பாக பந்து வீசி 9 இன்னிங்ஸில் விளையாடி 32 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இருந்தும் மற்ற பவுலர்கள் சரியான பந்து வீச்சை வெளிப்படுத்தவில்லை. கடைசி போட்டியில் பிரசித் கிருஷ்ணா ஓரளவுக்கு நன்றாக பந்து வீசினார். ஆனால் அவர் கடைசி போட்டியில் மட்டும் விளையாடினார்.
இந்நிலையில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்களும் ஷமி குறித்து பேசத் தொடங்கியுள்ளனர். முகமது ஷமி தற்போது காயம் காரணமாக மீண்டு வருகிறார். ஆனால் டெஸ்ட்டில் அவரால் அதிக ஓவர்கள் வீச முடியாது என்பதால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்நிலையில் ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஷமி அணியில் இருந்திருந்தால் இந்த தொடரில் அவரால் மாற்றம் நிகழ்ந்திருக்கும். பிசிசிஐ தவறு செய்து விட்டது. அதிக ஓவர்கள் வீசி முடியவில்லை என்றாலும் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.