Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடுத்த கேப்டன் இவர்தான்! ஆருடம் தெரிவிக்கும் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா ஒரு கதாநாயகனாகவே மாறிவிட்டார். பந்துவீச்சு, பேட்டிங், என இரண்டிலுமே மிகவும் சிறப்பாக அவர் செயல்பட்டு வருகிறார். 4 ஓவர்கள் பந்து வீசிய அவர் 21 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதேபோல பேட்டிங்கில் 97 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த இந்திய அணிக்கு அவர் கை கொடுத்து உதவினார். அவர் 17 பந்துகளை சந்தித்து 33 ரன்களை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா தொடர்பாக உரையாற்றிய முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ஹர்திக் பாண்டியா தான் அடுத்த கேப்டன் என்று நினைக்கிறேன். தோனி போன்ற ஒரு மிகப்பெரிய வீரராக பாண்டிய மாறிவிட்டார். அவர் மிகவும் அமைதியாகவும், இருக்கிறார். நன்றாக பேட்டிங்கும் செய்கிறார் என்று தெரிவித்தார்.

மிகவும் கடினமாக உழைத்து இந்த நிலைக்கு அவர் வந்திருக்கிறார். அவர் இந்தியாவின் கேப்டன் ஆவதை நான் எதிர்பார்க்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போதும், ஐபிஎல் போட்டியின்போதும், அவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது.

இந்திய அணியின் கேப்டனாக இருப்பதற்கான அனைத்து விதமான தகுதிகளையும், திறமைகளையும், அவர் பெற்றிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

Exit mobile version