Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான்!!! பிரபல ஜோதிடரின் கணிப்பு உண்மையாகுமா!!?

#image_title

உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான்!!! பிரபல ஜோதிடரின் கணிப்பு உண்மையாகுமா!!?
உலகக் கோப்பை தொடர்பு நாளை(அக்டோபர்5) முதல் தொடங்கவுள்ள நிலையில் 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி இது தான் என்று பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, இலங்கை ஆகிய பத்து அணிகள் பங்கேற்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர்பு நாளை(அக்டோபர்5) முதல் இந்தியாவில் தொடங்கவுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை(அக்டோபர்5) தொடங்கும் உலகக் கோப்பை தொடர் நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை தொடரில் பயிற்சி போட்டிகள் அனைத்தும் நேற்றுடன்(அக்டோபர்3) முடிந்துள்ளது. நாளை(அக்டோபர்5) தங்கும் உலகக் கோப்பை தொடர் பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் தொடங்கவுள்ளது.
நாளை(அக்டோபர்5) துவங்கும் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை எதிர்கொள்கின்றது. இந்த போட்டி குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நடப்பாண்டுக்கான உலகக் கோப்பையை வெல்லும் அணி யார் என்பதை பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்து கூறியுள்ளார்.
பிரபல ஜோதிடர் லோபோ அவர்கள் 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடரை இந்தியா வெல்லும் என்று கணித்து கூறியுள்ளார். இவரது கணிப்பு தற்பொழுது அனைவருடைய கவனத்தையும் பெற்றுள்ளது.
ஏற்கனவே லோபோ அவர்கள் 2011, 2015, 2019ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களின் பொழுது அவர் கணித்து கூறியதை போலவே நடந்துள்ளது.  மேலும் கடந்த காலங்களில் அவர் கணித்தது அப்படியே நடந்துள்ளதால் நெட்டிசன்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆனால் இவரைப் போல பலரும் கணித்து வருவது தற்போதைய காலத்தில் அதிகமாகி விட்டது. இவர்களுடைய கணிப்புதான் காரணம் என்றால் உலகக் கோப்பை வெல்ல போராட்டம் விளையாட்டு வீரர்களின் உழைப்பு என்னவாகும் என்று தெரியவில்லை. ஒரு வேலை சிறிய அணிகளான நெதர்லாந்து போன்ற அணிகள் கோப்பையை வெல்லும் கூறி அது நடந்தால் அப்போது தெரியும். இருந்தாலும் உண்மையான முடிவை காண்பதற்கு நவம்பர் 19ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.
Exit mobile version