இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ். டோனி. கடந்த சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று தனது ஓய்வு அறிவித்தார். இதுகுறித்து விவிஎஸ் லக்ஷ்மண் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவார். அவருடைய கடைசி போட்டி நடைபெறுவது பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி எம்.எஸ் டோனி பேரார்வமாக உள்ளார். இந்த அணியை நாம் அங்கீகரிக்க வேண்டும்.
டோனி தலைமையில் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடும் கடைசி போட்டியே அவருடைய விடைபெறுதல் போட்டியாகும். சச்சின் தெண்டுல்கர் வான்கடேவில் விடைபெறுதல் போட்டியில் விளையாடினார். அதேபோல் சென்னையில் எம்.எஸ். டோனியின் விடைபெறுதல் போட்டி இருக்கும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும் என்று கூறினார்.