Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ஒரு பானம் போதும்!! இனி தொப்பை இருந்த இடம் தெரியாமல் போகும்!!

இந்த ஒரு பானம் போதும்!! இனி தொப்பை இருந்த இடம் தெரியாமல் போகும்!!

தொப்பை கொழுப்பை எரித்து உடல் எடையை குறைக்கும் பானம்.வயிற்றை சுற்றி கொழுப்பு இருந்தால் அவை நமக்கு சங்கடங்களை ஏற்படுத்தும். அதே சமயம் தொப்பை அதிகரிப்பதால் விருப்பமான ஆடைகளை அணிய முடிவதில்லை.

இதுமட்டுமின்றி உடல் பருமனால் நீங்கள் பல நோய்களுக்கு பலியாகலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, ஜிம்மிற்குச் சென்று மணிக்கணக்கில் வியர்வை சிந்தவேண்டிய அவசியமில்லை.

அத்தியாவசிய கொழுப்பு தசைகள், எலும்பு மஜ்ஜை, நுரையீரல், இதயம், கல்லீரல் மற்றும் நரம்பு திசுக்களில் சிறிய அளவில் விநியோகிக்கப்படுகிறது, இது உடலின் உகந்த செயல்பாட்டிற்கு முக்கியமானது.எனவே இதனை குறைப்பதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

சியா விதை

இதனை சேர்ப்பதனால் நம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். உடம்பில் ஏற்படக்கூடிய முதுகு வலி கை கால் வலி அனைத்தையும் சரி செய்யும். உடல் எடையும் குறையும் மற்றும் உடல் சூட்டையும் குறைக்கும்.

கேரட்

இதில் விட்டமின் A,C,K உள்ளது மற்றும் இரைப்பையை ஆரோக்கியமாக வைக்க உதவும். நம் உடம்பில் உள்ள கிருமிகளை அழித்து ஆரோக்கியமாக வைக்காதவும். மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது.

கேரட்டில் உள்ள விட்டமின் A நம் கண் பார்வைக்கு மிகவும் உதவும் மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைக்கும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் நம் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதற்கு உதவும்.

தக்காளி

இது நம்ம ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கு உதவும். புற்றுநோய் வளர்ச்சியை குறைக்கும்.

மிளகு பொடி

இஞ்சி

தயிர்

செய்முறை:

1: முதலில் 2 டேபிள்ஸ்பூன் சியா விதைகளை எடுத்து தண்ணீரில் ஒரு அரை மணி நேரம் நன்றாக ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

2: பின்பு ஒரு கேரட் எடுத்து அதனை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.பிறகு இரண்டு தக்காளிகளை எடுத்து அதையும் சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

2: ஒரு மிக்ஸி ஜாரில் அறுத்து வைத்த கேரட் தக்காளி சிறிதளவு மிளகு பொடி மற்றும் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

3: ஒரு கண்ணாடி கிளாஸில் 3 டேபிள்ஸ்பூன் தயிர் மற்றும் நம் உறவைத்த சியா விதை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். பின்பு அரைத்து வைத்த கேரட் தக்காளி சரை அதில் சேர்த்து நன்றாக கலக்கி குடிக்க வேண்டும்.

இந்த ஆரோக்கியமான பானத்தை மதியம் அல்லது இரவு போன்று குடிக்க வேண்டும். இது போன்று குடித்து வந்தால் உடல் எடை உடலில் உள்ள தொப்பை அனைத்தும் குறைந்துவிடும்.

இதனை குடிப்பதனால் உடலில் உள்ள உஷ்ணம் மட்டும் குறையாமல் உடல் ஆரோக்கியமாகவும் பலவீனமாகவும் இருக்கும். இதனை வரத்தில் 2 நாட்கள் குடித்து வந்தால் போதும் உங்களது தொப்பை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.

Exit mobile version