Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னை அணியில் முதல் போட்டியில் இந்த வீரர் பங்கேற்க மாட்டார்

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் நடத்த முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு அனைத்து அணி வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அதில் சென்னை அணியில் பயற்சியாளர் உட்பட 13 பேருக்கு கொரோனா பாசிடிவ் என வந்தது.

இதனை அடுத்து அனைவரும் சரியான நிலையில் தற்போது முதல் போட்டி மும்பை அணிக்கும், சென்னை அணிக்கும் என தீர்மானமாகிவிட்டது. சென்னை அணி வீரரான ருதுராஜ் கெய்க்வாடுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை என முடிவு வந்தது இருப்பினும் அவர் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

 

Exit mobile version