மோடியின் மீது கருப்பு மை ஸ்ப்ரே அடித்த மூன்று வாலிபர்கள் கைது!..வெளிவந்த  திடுக்கிடும் தகவல் !..

0
239
Three youths arrested for spraying black ink on Modi!.. Shocking information revealed!..

மோடியின் மீது கருப்பு மை ஸ்ப்ரே அடித்த மூன்று வாலிபர்கள் கைது!..வெளிவந்த  திடுக்கிடும் தகவல் !..

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியானது இன்று தொடங்கி அடுத்த மாதம் பத்தாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுமார் 187 நாடுகள் பங்கேற்க உள்ளன.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை புரிகிறார்.இவர் குஜராத் மாநிலம் ஆமதாபாத் தனி விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.

பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 5.25 மணிக்கு புறப்பட்டு ஐ.என்.எஸ் அடையாறுக்கு 5.45 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து 5.50 மணிக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டு, விழா நடைபெறும் உள்விளையாட்டு அரங்கத்துக்கு மாலை 6 மணிக்கு வந்தடைவார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்க உட்பட பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. 44வது செஸ் ஒலிம்பிய தொடர்பான விளம்பர பாதகைகள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.

இதில் பிரதமர் மோடியின் போட்டோக்கள் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாஜகவின பிரதமரின் போட்டோக்கள் ஒன்றை சென்னை அடையாறு பகுதியில் அங்குள்ள சுவரொட்டியின் மீது ஒட்டினர்.இதனையடுத்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சிலர் அந்த பக்கமாக வந்தனர்.

சிலர் பிரதம நரேந்திர மோடியின் புகைப்படத்தின் மீது கருப்பு மை ஸ்பிரேக்களை அடித்தனர். இதனால் மோடியின் புகைப்படம் மறைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

இந்த விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினரைச் சேர்ந்த மூணு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.