இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்றாவது போட்டியில் சதம் அடித்த திலக் வர்மா மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்துள்ளார். 2 ஆண்டுகள் கழித்து சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சி இதற்காக தான் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்தியாணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது இதன் முதல் போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் 5 விக்கெட் இழப்பிற்கு தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து நேற்று இந்த தொடரின் மூன்றாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் களமிறங்கியது. முதல் போட்டியில் சதமடித்த சஞ்சு சாம்சன் இரண்டாவது டக் ஆனார். அதே போல் இந்த போட்டியில் ரன் ஏதும் இல்லாமல் டக் அவுட் ஆனார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா சிறப்பாக விளையாடினார். தென்னாபிரிக்க வீரர்களின் பந்தினை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் ராக்கெட் போல பறக்கவிட்டார். முதல் 32 பந்துகளில் அரைசதம் பின் 19 பந்துகளில் சதம் விளாசினார். அதன் பின் பேசிய அவர் 2 ஆண்டுகளாக இதற்காகத்தான் காத்திருக்கிறேன். காயம் ஏற்பட்ட பின்பு இது முதல் சதம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும் கூறினார்.