2025 – 26 நிதியாண்டின் தமிழக பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். கோவை சூலூர், பல்லடத்தில் தலா 100 ஏக்கர் பரப்பளவில் செமிகண்டக்டர் இயந்திர தொழில் பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்தார். சென்னை வேளச்சேரியில் 310 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்படும் எனவும் அறிவித்தார். இதனால் 7 லட்சம் பேர் பயனடைவார்கள் எனவும் கூறினார்.
மேலும், ஒசூரில் 400 கோடி செலவில் 5 லட்சம் சதுர அடியில் புதிய டைட்டில் பார்க் (தொழில் நுட்ப பூங்கா) அமைக்கப்படும், அதேபோல், மதுரை, கடலூரில் 250 கோடி செஅல்வில் காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும். அதோடு, 9 இடங்களில் ரூ.3,566 கோடியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். இதன் மூலம் 17, 500 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என தங்கம் தென்னரசு அறிவித்திருக்கிறார்.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில்தான் முதன் முதலில் டைடல் பார்க் உருவாக்கப்பட்டது. கம்ப்யூட்டர் பொறியியல் படித்த மாணவ, மாணவிகளுக்கு அங்கே வேலை வாய்ப்பு கிடைத்தது. அதோடு, தொழிநுட்பம் தொடர்பான பல நிறுவனங்கள் அங்கே தங்களின் கிளைகளை நிருவியிருக்கிறது.
இந்த நிலையில்தான் ஒசூரில் டைடல் பார்க் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் வேலை வாய்ப்பிற்கு சென்னை அல்லது பெங்களூரை நம்பியிருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள ஒசூரில் டைடல் பார்க் துவங்கப்பட்டால் பெங்களூருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.