Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடலை சுருசுருப்பாக வைத்திருக்க!! இதை விட சிறந்த மருந்து எங்கும் இருக்காது!!

உடலை சுருசுருப்பாக வைத்திருக்க!! இதை விட சிறந்த மருந்து எங்கும் இருக்காது!!

உடல் சோர்வு, அசதி, அடிச்சு போட்ட மாறி வலி, கண் சோர்வு, எரிச்சல், மூட்டு வலி, நரம்பு இழுத்தல் இது போன்ற பிரச்சனையா? இதை குடியுங்கள் அடுத்த நிமிடமே ஓடிவிடும்.

இந்த உடல் சோர்வு வருவதற்கான காரணங்கள்:

1: உடல் சோர்வு என்பது அதிக வேலை, இடைவிடாமல் பணி செய்வது, தீவிரமான காய்ச்சலுக்கு பிறகு போன்ற நேரங்களில் உண்டாவது இயல்பு. ஆனால் வழக்கத்துக்கு மாறாக தினமும் காலை தூங்கி எழுந்ததுமே சோர்வை உணர்ந்தால் இவை தொடர்ந்து உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

2: முதலில் காலை நேரத்தில் உண்டாகும் உடல் சோர்வு அறிகுறி நாளடைவில் நாள் முழுக்கவே சோர்வை உண்டாக்கிவிடும். இது மன அழுத்தத்தையும் அதிகப்படியாக்கும். இந்த சோர்வு ஏற்பட என்ன காரணமாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.

இந்த உடல் சோர்வினை போக்க வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

வெந்தயம்

பனங்கற்கண்டு

தக்காளி

மஞ்சள் தூள்

சுக்கு

செய்முறை:

1: தக்காளியை எடுத்து இரண்டாக அறுத்து அதில் பாதி தக்காளியை சின்னச்சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2: ஒரு பாத்திரத்தில் அந்த நறுக்கி வைத்த தக்காளியை சேர்க்கவும்.

3: பின்பு அதில் சுடுதண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

4: அதில் 1 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை சேர்க்கவும்.

5: பின்பு 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்க்கவும்.

6: சிறிதளவு அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

7: பின்பு நன்றாக கலக்க வேண்டும்.

8: நன்றாக கலந்தவுடன் ஒரு துண்டு சுக்கை எடுத்து நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.

9: இடித்த சுக்கை அந்த தண்ணீரில் சேர்க்கவும்.

10: அதனை வடிகட்டி குடித்தால் போதும்.

இதுபோன்று தினமும் நம் செய்து வந்தால் உடல் சோர்வு, அசதி இதுபோன்ற பிரச்சனைகள் உடனடியாக தீர்ந்து விடும்.

Exit mobile version