கர்ஜிக்கும் சென்னை சிங்கத்திடம் தப்பிக்குமா மும்பை ! இன்று பல பரீட்சை !!

0
221

இன்று நடைபெறும் ஐபிஎல் 27 வது லீக் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணி விளையாட உள்ளது.
இதில் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மும்பை அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது இந்த இரு அணிகளும் வெற்றி முனைப்பில் அதிகம் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணியை பொருத்தவரை நல்ல தொடக்க வீரர்களும் நல்ல பந்து வீச்சாளர்களும் கொண்ட அணியாக விளங்குகிறது. ஐபிஎல் தொடரில் மும்பை அணி சற்று சரிவை சந்தித்தாலும் தற்பொழுது சரிவை மீண்டு வெற்றியை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் தீபக்சாகர்,சாம்கரன், ஜடேஜா, போன்ற வீரர்கள் நல்ல பார்மில் உள்ளனர்.

மும்பை அணியில் பேட்டிங்கை பொறுத்தவரையில் ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ், குவின்டன் டி காக் தவிர மற்ற வீரர்கள் சரியாக விளையாட வில்லை மற்ற வீரர்கள் சரியாக விளையாடாத காரணத்தால் ஏமாற்றம் அளிக்கிறது. மேலும் இந்த போட்டியில் மும்பை மற்றும் சென்னை வீரர்கள் வெற்றி முனைப்போடு விளையாடுவார்கள் என்பதால் ஆட்டத்தில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது.

இந்த இரு அணிகளும் இதுவரை 30 போட்டிகளில் விளையாடி சென்னை அணி 12 போட்டிகளிலும் மும்பை அணி 18 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே சென்னை வெற்றி பெற்றுள்ளது.