Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி!!! தொடரை முழுமையாக கைப்பற்றுமா இந்தியா அணி!!?

#image_title

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி!!! தொடரை முழுமையாக கைப்பற்றுமா இந்தியா அணி!!?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று(செப்டம்பர்27) நடைபெறவுள்ள நிலையில் தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கத்தில் இந்தியா களமிறங்கவுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இதையடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று(செப்டம்பர்27) மதியம் ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது.

இன்று(செப்டம்பர்27) நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, விராட் கோஹ்லி ஆகியோர் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். அதே போல ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் அணிக்கு திரும்பியுள்ளார். ஆறுதல் வெற்றி பெறும் நோக்கத்தில் ஆஸ்திரேலியா அணி களமிறங்கும் நிலையில் இந்தியா மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அக்டோபர் மாதம் துவங்கும் உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் மாதம் 23ம் தேதி துவங்குகிறது.

Exit mobile version