Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று! அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மும்பையா லக்னோவா!!

#image_title

இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று! அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மும்பையா லக்னோவா!
நேற்று மே 23ம் தேதி முதல் குவாலிபையர் சுற்று நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று அதாவது மே 24ம் தேதி ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்று இன்று சென்னையில் நடக்கவுள்ளது.
இன்று இரவு நடக்கவிருக்கும் எலிமினேட்டர் சுற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் க்ருணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதவுள்ளது.
இந்த இரண்டு அணிகளில் வெற்றி பெறும் அணி வெள்ளிக்  கிழமை அதாவது மே 26ம் தேதி நடக்கும் இரண்டாம் குவாலிபையர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் விளையாடும். இதுவரை லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய அனைத்து லீக் சுற்றுகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி பெற்றுள்ளது.
இதையடுத்து இன்று நடக்கும் போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது. இரண்டாவது முறை பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ள லக்னோ அணி எப்படியாவது இறுதிப் போட்டிக்குள் சென்று முதல் கோப்பையை வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் விளைய்டவுள்ளது.
லக்னே சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் எலிமினேட்டர் சுற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று(மே 24ம் தேதி) இரவு 7.30 மணிக்கு தொட்ங்குகின்றது.
Exit mobile version