டோக்கியோ ஒலிம்பிக்!! இந்தியாவின் உண்மையான ஹீரோ!! குத்துசண்டை வீரர் சதீஷ் குமார்!!
டோக்கியோவில் நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த பல்வேறு வீரர்கள் கலந்து கொண்டு தங்களின் முழு திறமையையும் காண்பித்து வருகிறார்கள். இதில் சில வீரர்கள் பதக்கங்களை கைப்பற்றி உள்ளார்கள். அந்த வரிசையில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்தவர் மீராபாய். இவர் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று உள்ளார். இரண்டாவது பதக்கத்தை குத்துச் சண்டை வீராங்கனை லவ்லீனா வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்து உள்ளார். மேலும் இறுதிச் சுற்றுக்கான போட்டிக்கு தயாராகி உள்ளார்.
டென்னிஸ் டென்னிஸ் வீராங்கனையான பி. வி. சிந்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இந்த வரிசையில் இன்று ஆண்களுக்கான சூப்பர் ஹெவி வெயிட் குத்துச்சண்டை போட்டியில் 99 கிலோ எடைப்பிரிற்கான காலிறுதி போட்டி நடைபெற்றது. அதில் இந்திய குத்துச் சண்டை வீரரான சதீஷ்குமார் மற்றும் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிர் ஜலோலோவ் ஆகியோர் மோதிக் கொண்டனர். இந்தப்போட்டியில் சதீஷ்குமார் பெரும் போராட்டத்திற்கு பிறகு தோல்வி அடைந்தார். சதீஷ்குமார் இந்தியாவின் முதல் ஹெவிவெயிட் 99 கிலோ எடைப்பிரிவில் குத்துச்சண்டை வீரர் ஆவார். இருப்பினும் இவர் இந்தியாவின் ரியல் ஹீரோ என்று இணையதளத்தில் பாராட்டி வருகின்றனர்.
சுபேதார் மேஜர் சதீஷ் குமார் யாதவ் இந்திய ராணுவதின் ஜூனியர் கமிஷன் செய்யப்பட்ட அதிகாரி ஆவார். மேலும், புலந்த்ஷஹரைச் சேர்ந்த ஒரு இந்திய குத்துச்சண்டை வீரர் ஆவார். சூப்பர் ஹெவி வெயிட் பிரிவில் 2014ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். மேலும், சூப்பர் ஹெவி வெயிட் பிரிவில் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் இவர் ஆவார்.