நாளை கடைசி நாள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க!! இல்லையெனில் அபராதம் அரசு எச்சரிக்கை!!
ஜூன் 30 ம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டை கட்டாயம் இணைக்க வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட தேதிக்குள் இணைக்க வில்லை என்றால் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும்.
நாம் வைத்திருக்கும் பான் கார்டு வங்கி தொடர்புடைய அனைத்து சேவைகளுக்கும் கட்டாயம் உதவும் ஒன்றாகும்.இதில் வங்கி எண் மற்றும் வங்கி கணக்கு என்று அனைத்தும் இந்த பான் கார்டில்தான் இணைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஆதார் அட்டையும் நாம் வைத்திருக்கும் அடையாள ஆவணங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். நம்முடைய அனைத்து தேவைகளுக்கும் இந்த ஆதார் அட்டை மிகவும் கட்டாயம்.
அதனால் நாடு முழுவதும் இந்த ஆதார் மற்றும் பான் கார்டை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.அதற்கான கால அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இணைப்பதற்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
ஏற்கனவே ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பதற்கு கால அவகாசம் கொடுத்த நிலையில் பலர் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இதனை இணைக்கவில்லை.அதனால் ஜூன் 30 ம் தேதி வரை மீண்டும் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
இவ்வாறு கால அவகாசம் கொடுப்பது இது ஐந்தாவது முறை ஆகும். இதனால் மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் ஜூன் 30 ம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 30 ம் தேதிக்கு பிறகு ஆதார் மற்றும் பான் கார்டை இணைத்தால் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.