நாளை ஆரம்பமாகிறது ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பை.!!

0
168

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது.

கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் இதுவரை உலகக்கோப்பையை வென்றுள்ளன.

இந்நிலையில் நாளை ஏழாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆரம்பமாக உள்ளது.

இதில் குரூப் சுற்றுப் போட்டிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறுகின்றன. சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் 24ம் தேதி முதல் தொடங்குகின்றன. குரூப் சுற்றி முதல் போட்டியாக ஓமன்- பப்புவா நியூகினி அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை நடைபெற உள்ளது.

இதில், இந்திய அணியின் முதல் போட்டி குரூப் 12 சுற்றில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 24ஆம் தேதி விளையாடுகிறது.