Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம்! பாகிஸ்தான் அணி முதல் முறையாக செய்த சாதனை!!

#image_title

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம். பாகிஸ்தான் அணி முதல் முறையாக செய்த சாதனை.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளது. முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே முதல் 3 ஒருநாள் போட்டிகளையும் பாகிஸ்தான் அணி வென்று 3-0 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரித் 4க்கு 0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் பாபர் அசம் சதம் அடித்து சிறப்பாக விளையாடியதின் காரணமாக பாகிஸ்தான் அணி 4வது ஒரு நாள் போட்டியையும் வென்று ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்னர் பாகிஸ்தான் அணி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 5வது இடத்தில் இருந்தது. நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியா நான்கு போட்டிகளில் வென்ற பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா, இந்தியா என இரண்டு அணிகளையும் முந்தி முதலிடம் பிடித்துள்ளது. பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா மூன்று அணிகளுமே 113 புள்ளிகள் பெற்றுள்ளது. இருந்தாலும் விளையாடிய போட்டிகளில் வெற்றி பெற்ற போட்டிகளின் அடிப்படையில் பாகிஸ்தான் அணி முதல் இடம் பிடித்துள்ளது.

Exit mobile version